விஜயம்




 


பாறுக் ஷிஹான்

 
அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா  அதிபர் (DIG) தமயந்த விஜய சிறி மற்றும் இலங்கை டென்னிஸ் சங்கத்தின் தவிசாளர் இக்பால் பின்  இஸ்ஹாக்  ஆகியோர்  சனிக்கிழமை(10)  நிந்தவூர் கமு/ கமு/ அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு விஜயம்  செய்தனர் .

இதன் போது அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டு வரும்  டென்னிஸ் விளையாட்டு கூடத்தை tennis court பார்வையிட்டதுடன் டென்னிஸ் விளையாட்டு துறையின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் ஏ அப்துல் கபூர், ,பிரதி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு  உட்பட பலரும் கலந்து கொண்டனர்