ஓய்வு பெற்ற அதிபர் யுஏ.சகீது ஹாஜியார் இன்று காலமானார்




 


அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் யுஏ.சகீது ஹாஜியார் இன்று காலமானார்.


கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து பல உலமாக்களையும் பல கல்விமான்களையும் உருவாக்கிய யு.ஏ.சகீது ஹாஜியாரின் மறைவு மிகவும் கவலையளிக்கிறது.


இஸ்லாமிய மார்க்க விழுமியங்களோடு தன்னை முழுமையாக அர்ப்பணித்து கல்வியாளர்களையும் மார்க்க பற்றாளர்களையும் நாடு பூராகவும் உருவாக்கியவர்.


அட்டாளைச்சேனை மண்ணில் பல பள்ளிவாசல்களை நிறுவுதலில் முன்னின்று உழைத்தவர்.


இவரின் இழப்பு அட்டாளைச்சேனைக்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்குமானது.


இவரின் இழப்பால் அட்டாளச்சேனை மண் மிகவும் ஆழ்ந்த சோகத்தில் உள்ளது.