ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது





 திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி வெருகல் வீதி சோதனை சாவடியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இருந்து இலங்கை துறைமுகத்துவாரம் பகுதிக்கு மீன்களை ஏற்றுவதற்காக வந்து கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட லொறியில் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் மூலம் தெரிய வருகிறது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து ஈச்சிலம்பற்று பொலிஸாருடன் இணைந்து வெருகல் வீதி சோதனை சாவடியில் நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த லொறியில் யை சோதனை இட்ட போது 50 கிரேம் 220 மில்லி கிரேம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிக்குடி-செட்டிபாலயம் பகுதியைச் சேர்ந்த 27,30,35 மற்றும் 39 வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் தடுத்து விசாரணை செய்து வருவதுடன், விசாரணையின் பின்னர் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.