தனது பயணத்தில் இணைந்து பயணிக்க ஊடகவியலாளர்களை அழைத்த ஆளுநர் !




 


அமைப்பது தொடர்பிலும், கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை முன்னெடுக்க வேலைத்திட்டமொன்றை செய்யுமாறும் ஆளுநரை வலியுறுத்தினார்.


இங்கு கருத்து தெரிவித்த நாம் ஊடகர் பேரவை தலைவர் ஊடகவியலாளர் யூ.எல். மப்ரூக் உலகின் தரமிக்க தேயிலையை இலங்கையர்களும் பருகும் வாய்ப்பை கிழக்கு ஆளுநர் உருவாக்கித்தர வேண்டும் என்றும், கிழக்கின் சுற்றுலாத்துறை பற்றிய விளக்கங்களை வழங்கிய அவர் சுற்றுலாத்தளங்களில் பிரசித்தி பெற்ற இடங்களை கொண்டுள்ள கிழக்கில் உயர்ரக தேயிலை விற்பனை நிலையங்களை உருவாக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் ஊடகவியலாளர்கள் தமது பணியை சிறப்பாக செய்ய அவர்களுக்கு ஊடக உபகரணங்களை பெற உள்ள சிக்கல்களை நீக்கி அவற்றை பெற்றுக்கொடுக்க ஆளுநர் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நுஜா ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.எம். அரூஸ் கிழக்கின் ஆளுநர்களில் ஊடகவியலாளர்களை முதன்முதலாக அழைத்து பேசிய புதிய ஆளுநருக்கு நன்றிகளை தெரிவித்ததுடன் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களுடன் நட்புறவுடன் கூடிய உறவை பேண மக்களின் குறைநிறைகளை அவசரமாக முடிந்தளவில் நிவர்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கிழக்கிலுள்ள வளங்களை பயன்படுத்தி கிழக்கை முன்மாதிரியான மாகாணமாக முன்னேற்ற தான் அர்ப்பணிப்புடன் சேவையாற்றவுள்ளதாகவும், சுத்தமான கடற்கரை வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுவருவதாகவும், இன நல்லிணக்க வேலைத்திட்டங்களை அது சார்ந்தவர்களிடம் தான் கையளித்து விட்டு கிழக்கையும், நாட்டையும் முன்னேற்ற தயாராக உள்ளதாகவும், அந்த பயணத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பரியது என்றவகையில் தன்னுடன் இணைந்து ஊடகவியலாளர்கள் பயணிக்க வேண்டும் என்றும், நாட்டின் கடன்சுமை அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பில் தான் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஆளுநர் இந்த சிநேகபூர்வ சந்திப்பின் போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.