கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகாவித்தியாலய பின்புறச் சுவர்,உடைந்து,ஊஞ்சலாடி, ஓட்டை விழுந்து கவனிப்பாரற்று காணப்பட்டிருந்தது.
இது பற்றி பலரும் கேள்வி எழுப்பினர். கல்லுாரிக்குள் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மைதானத்திற்கு மண் போட்டு நிரப்பப்பட்டது.ஆனால். பின் புறச் சுற்று மதில் சுக்குநுாறாகிக் காணப்பட்டது. சுற்று மதில் கட்டினால், (கொமிசன்) தரகுப் பணம் கிடையாது என்ற காரணத்தினால், கொந்தராத்துக்காரர்கள், கை விட்டிருக்கலாம் என பலரும் எள்ளி நகையாடியிருமிருந்தனர்.
பாடசாலை வேளையில் மாணவர்கள் அங்கு பாடம் கற்பதைவிட வீதியில் அலை பாய்ந்து திரிவதை, பாமர மக்களும் கூர்ந்து கவனித்தனர். சிறந்த நிருவாக முகாமைத்துவமின்மையும், திறனற்றவர்கள் அதிபர்களாக வந்ததும் இன்னுமொரு காரணமாகும்.
துார்ந்து போய்க் கிடந்த இந்தக் கல்லுாரியின் கல்வியினையும், விழுந்து கிடந்த சுவர் துாண்களையும் துாக்கி நிறுத்துவது யாரென்ன வினா எழுப்பப்பட்டிருந்தது. பழைய மாணவர்கள் இந்த சுற்று மதிலை புதிதாய் நிருமாணிக்க நினைத்த வேளைகளில்கூட அப்போதைய நிருவாகம் இடமளிக்கவில்லை. ஆனால், நடப்பு பழைய மாணவர் சங்கத்தினர், இரும்புத் திரைகளை உடைத்து, அரசியல்வாதிகளின் ஆதரவின்றி, பழைய மாணவர்கள், பலரதும் உதவிக் கரங்களுடன் நினைத்ததை சாத்தியமாக்கியுள்ளனர்.
அக்கரைப்பற்று அஸ்ஸிராஐ் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகளால், மிக நேர்த்தியாக பின்புற சுற்றுமதில் கட்டப்பட்டு, நிறப் பூச்சும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இது ஒரு வகையில் "சீனப் பெருஞ்சுவர்" போல காட்சியளிக்கின்றது.இதற்காக தம்மை முழு வீச்சாக அர்ப்பணித்து களப் பணிபுரிந்துள்ளனர் பழைய மாணவர்கள் என்றால் அது மிகையல்ல.
Post a Comment
Post a Comment