பயிற்சிநெறி




 


மத்தியஸ்த நுட்ப முறை மற்றும்  உபாயங்கள் தொடர்பான 5 நாள்  பயிற்சிநெறி காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிநெறியின் போது அம்பாரை மாவட்ட செயலக மத்தியஸ்த பயிலுனர் எம்.ஐ.எம் ஆஸாத் மற்றும் வவுனியா மாவட்ட செயலக மத்தியஸ்த பயிலுனர் எஸ். விமலராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர். இப்பயிற்சியின் இறுதிநாள் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் அவர்களினால் பயிற்சி வழங்கிய பயிற்றுவிப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். (நூருல் ஹுதா உமர்)