பாறுக் ஷிஹான்
போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது உறவுகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு இடம்பெற்றது.
இக்கருத்தரங்கு இன்று (4) அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் அல்-அமானா சமூக சேவை அமைப்பின் தலைவருமான எம்.வி நவாஸ் தலைமையுரையுடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் ,சிரேஷ்ட சட்டத்தரணியும் கல்முனை காதி நீதவானுமான எப்.எம்.அமீருல் அன்சார் மௌலானா, சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டீ.எம்.எஸ்.கே தசநாயக்க ,பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.அப்துல் கபூர் ,சவளக்கடை பொலிஸ் நிலைய பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான ஏ.எம் ஜவ்பர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
மேலும் அதிகளவான பெண்கள் கலந்து கொண்ட இப்போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக திறமையாக செயற்பட்டு கொரோனா அனர்த்தம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயற்பாடுகள் உள்ளிட்ட இடர் காலங்களில் பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கி தற்போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக திறமையாக செயற்பட்டு வருகின்ற ரம்சீன் பக்கீருக்கு நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் அல்-அமானா சமூக சேவை அமைப்பின் தலைவருமான எம்.வி நவாஸ், தலைமையில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஏ.நபீர், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் இளைஞர் குழு தலைவர் எஸ்.சஹாப்தீன், ரீ.எம் றிபாஸ் ஆகியோரினால் பொன்னாடை போர்த்தப்பட்டு உயரிய கௌரவம் அளிக்கப்பட்டது.
Post a Comment
Post a Comment