இ.கி.மிசனில் சர்வதேச யோகாதினம்!




 (


(வி.ரி. சகாதேவராஜா)


 மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்லத்தில் சர்வதேச யோகா தினம், இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ்  தலைமையில் நேற்று(11) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் விவேகானந்த சபை ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

 200 மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எம். செல்வராஜா உள்ளிட்ட அதிதிகள் கலந்து யோகாவின் மகத்துவம் தொடர்பாக உரையாற்றினார்கள்.
உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ்  விசேட உரையாற்றினார்.