( வி.ரி. சகாதேவராஜா)
மக்கள் வங்கியின் இந்து மாமன்றத்தினர் வருடாந்தம் நடத்திவரும் கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கான உலருணவுப் பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு இம்முறையும் உகந்தையில் நடைபெற்றது.
அம்பாறை பிராந்திய முகாமையாளர் திருமதி எம் எம் ஏ. அமரசிறி தலைமையில் உணவுப்பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் அம்பாறை உதவி பொது முகாமையாளர் டபிள்யூ.முத்துகல மட்டக்களப்பு உதவி பொதுமுகாமையாளர் என் அருட்செல்வம் அம்பாறை பிராந்திய உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் .
பாதயாத்திரிகர்கள் 500 பேருக்கு மக்கள் வங்கி இலச்சினை பொறித்த பேக்குடன் 500 உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குமண தேசிய சரணாலய முன்றலில் வைத்து மக்கள் வங்கியின் இந்து மாமன்ற உறுப்பினர்களால் இப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கு மக்கள் வங்கியின் அம்பாறை மொனராகலை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு வன்னி ஆகிய பிரதேச மக்கள் வங்கியின் இந்து மாமன்ற உறுப்பினர்கள் பங்களிப்புச் செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment