இராஜினாமா




 


தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனை உறுதிப்படுத்தினார். 

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து தாம் விலகுவதாக குறிப்பிட்டு, அமைச்சின் செயலாளருக்கு சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

அந்த கடிதத்தின் பிரதி தமக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மேலும் கூறினார்.