நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாணத்தின் பழம்பெரும் கிராமமான சம்மாந்துறையைச் சேர்ந்த கிழக்கு மாகாண நிருவாக பிரதிப் பிரதம செயலாளர் ஆதம்வாவா மன்சூர் அவர்களின் 39 வருட கால அரச மற்றும் நிர்வாக சேவையை பாராட்டி சிலோன் மீடியா போரம் பாராட்டி கௌரவித்தது.
கிழக்கு மாகாண நிருவாக பிரதிப் பிரதம செயலாளர் ஆதம்வாவா மன்சூர் அவர்களின் 39 வருட கால அரச சேவையை பாராட்டி கௌரவிக்கும் விழாவும், அவர் பற்றிய "மன்சூர் எனும் நிருவாக ஆளுமை" நூல் வெளியீடும் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் சம்மாந்துறை சாதனையாளர்களை வாழ்த்தும் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதிக மக்கள் வெள்ளத்தின் மத்தியில் அரச உயரதிகாரிகளின் பங்குபற்றலுடன் மிகப்பிரமான்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வைத்து மணிமுடி அணிவித்து பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி சிலோன் மீடியா போரம் கிழக்கு மாகாண நிருவாக பிரதிப் பிரதம செயலாளர் ஆதம்வாவா மன்சூர் அவர்களை கௌரவித்தது.
இக்கௌரவிப்பு நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் தலைவரும், சாய்ந்தமருது பிரதேச செயலக சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளருமான கலாநிதி றியாத் ஏ மஜீட், சிலோன் மீடியா போரத்தின் பொதுச்செயலாளரும், நாவிதன்வெளி பிரதேச செயலக நிதி உதவியாளருமான எம்.எஸ்.எம். முஜாஹித், சிலோன் மீடியா போரத்தின் பொருளாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், சிலோன் மீடியா போரத்தின் பிரதிச்செயலாளரும், சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தருமான எம்.எம். ஜபீர், சிலோன் மீடியா போரத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்களான கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள உத்தியோகத்தர் பைசால் இஸ்மாயில், ஐ.எல்.எம். நாஸீம், சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர் ஏ.பி.எம்.இம்றான், எம்.பரீட் அல்தாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR
BBA (HRM), Dip.In.
Post a Comment
Post a Comment