செயலமர்வு





 பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட டிஜிட்டல் ஊடகம் குறித்த ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு இன்று(11)  அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் வசந்த சந்திரபால தலைமையில் ஆரம்பமானது .

இந்த கருத்தரங்கில் டிஜிட்டல் ஊடக தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஜெயசிறி ஜெயசேகர ,  மெத்லால் வீரசூரிய, முதலானோர் கலந்து கொண்டனர்.

 இக் கருத்தரங்கில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம்   ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் சனிக்கிழமை (10)   மற்றுமொரு  தொகுதி ஊடகவியலாளர்களுக்கும் பயிற்சி நெறி ஒன்று குறித்த இடத்தில்  ஆரம்பமாகி இருந்தது.இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.