மர நடுகை




 


நூருல் ஹுதா உமர்


காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்  காரைதீவு பிரதேச செயலக நடராஜானந்தா மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின்  ஏற்பாட்டில் மர நடுகை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் த.கமலநாதன் அவர்களினால் மரக்கன்றுகள் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது அங்கத்தவர்கள் 24 பேருக்கு ரூபா 1,750,000 கடன் வழங்கியதுடன், 24 பழ மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவியும் கௌரவிக்கப்பட்டார்.