பொலிசார் அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டும்




 


பாறுக் ஷிஹான்


புலனாய்வுகளின் போது சந்தேக நபர்களை சித்திரவதைக்குள்ளாக்காமலும்  இழிவான நடத்துகைக்குள்ளாக்காமலும் பொலிசார் அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டும்- மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை இணைப்பாளர் அப்துல் அஸீஸ்


எமது நாட்டில் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டு செல்லும் அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம் குடும்பத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. குடும்பச் சுமைகளை சுமக்கின்ற தாய்மார்கள் வேலைக்கு செல்லும் போது ஏற்படும் விபரீதங்கள் பற்றியும்  சமூகத்தில் உள்ளவர்களின் வறுமை  கல்வியறிவின்மை போன்ற காரணங்களினாலும் நாளுக்கு நாள் பொலிஸ் நிலையங்களில' முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் புலனாய்வுகளின் போது சந்தேக நபர்களை சித்திரவதைக்குள்ளாக்காமலும்  இழிவான நடத்துகைக்குள்ளாக்காமலும் பொலிசார் அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார். 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச சித்திரவதைக்கு எதிரான தினத்தையொட்டி  இன்று (26) கல்முனை பிராந்தியத்தலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கான செயலமர்வு கல்முனை பொலிஸ் தலைமை நிலையத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது.