புட்டம்பை பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம்




 


வி.சுகிர்தகுமார் 0777113659  


 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புட்டம்பை பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 55 வயதுடைய ஒருவரின் சடலம் அக்கரைப்பற்று பொலிசாரால் மீட்க்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனங்காட்டை சேர்ந்த செல்லையா தேவராஜன் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டார்.

வீட்டில் இருந்து வெளியேறி இரு நாட்கள் கடந்த நிலையில் புட்டம்பை பிரதேச மலையடிவார ஓரமொன்றில் சடலமொன்று தொங்குவதாக மக்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த கிராம உத்தியோகத்தர் பொலிசாருக்கு தகவலை வழங்கிய நிலையில் அக்கரைப்பற்று பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.

மரணம் தொடர்பான விசாரணைகள் அக்கரைப்பற்று பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.