பாராட்டு விழா!




 


( வி.ரி.சகாதேவராஜா)


 35 வருட கால கல்விச் சேவையாற்றிய பட்டிருப்பு வலய ஆரம்பக்கல்வி உதவி கல்விப்பணிப்பாளர் பாலசுந்தரம் வரதராஜன், 58 வது வயதில் ஓய்வு பெற்றதையடுத்து அவருக்கு பாராட்டு விழா நேற்று(7) புதன்கிழமை நடாத்தப்பட்டது .

அவர் சார்ந்த மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை 1991/92 அணியினர் இந்த பாராட்டு விழாவை களுவாஞ்சிக்குடியில் விமரிசியாக நடத்தினர்.

 அந்த அணியின் தலைவர் உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில், கவிமணி எஸ். புண்ணியமூர்த்தி  எழுதிய "பூச்சொரியும் புலனத்து நட்சத்திரங்கள்" என்ற கவிவாழ்த்து மடலை கவிஞர் ஆ.புட்கரன் வாசித்துஅளித்தார்.

அணியின் லண்டன் நண்பர் நடராஜா இணை அனுசரணை வழங்கியிருந்தார்.
 வரதராஜனின் தாயார் திருமதி பாலசுந்தரம் நடுநயமாக இருக்க  நண்பர்கள் சூழ இருந்து வாழ்த்துரைகளை வழங்கினர்.