அம்பாரை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் மாணவத்தலைவர்களின் தலைவர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி





வி.சுகிர்தகுமார் 0777113659  



முஸ்லிம் பாடசாலைகளின் மாணவத்தலைவர்களின் தலைவர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி
தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.பி.முஜீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கல்வி அமைச்சின் முஸ்லிம் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் மேஜர் என்.ரி.நசுமுடீன் மற்றும் அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் அஷேக் ஏ.எம்.றகுமதுல்லா உள்ளிட்ட கொழும்பு சாகிறா கல்லூரியின் அதிபர் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி அதிபர் மற்றும் வைத்தியர்கள் பாடாசலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
காலை நேரம் கிராத் ஓதலுடன் ஆரம்பமான நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
பின்னர் பாடசாலையின் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நீச்சல் பயிற்சி தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. இதன் பின்னராக பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பல்வேறு தலைமைத்துவ விழிப்புணர்வு உரைகளும் நிகழ்வின் நோக்கம் பற்றிய கருத்துகளும் அதிதிகளால் முன்வைக்கப்பட்டன.
இதேநேரம் மாணவர்கள் குழுக்களாக இணைந்து குழுச்செயற்பாட்டிலும் ஈடுபட்டனர். அத்தோடு க மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட புத்தாக்க உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.
மாணவ தலைவர்களின் மனப்பாங்கு மற்றும் உளவிருத்தி செயற்பாட்டில் முன்னேற்றத்;தை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதுடன் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் வேலைத்திட்டமாகவும் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.