ஜனாதிபதி சட்டத்தரணி,செல்வி_சாந்தா அபிமன்னசிங்கம் மறைவு




 





ஜனாதிபதி சட்டத்தரணி #செல்வி_சாந்தா #அபிமன்னசிங்கம் காலமானார்.

யாழ்ப்பாணம் உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இறக்கும் போது இவருக்கு வயது 76. இவர் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவராகத் தொழிற்பட்டு சட்டத்தரணிகளின் நலனுக்காக உழைத்தவர். 

சட்ட நுணுக்கங்களை நீதிமன்றங்களில் புரியவைத்து சமர்ப்பணம் செய்தல்  மற்றும் தமது வாதத்திறமை, சட்டத்துறை சம்மந்தமான பரந்துபட்ட அறிவு ஆளுமைகளால், ஜனாதிபதி சட்டத்தரணி என்ற அந்தஸ்தை அடைந்தார்.வட இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதி சட்டத்தரணியான இவர், சட்ட மகுடத்தில் ஒரு மாணிக்கம்.

தமது கட்சிக்காரர்களுக்கு இறுதிவரைப் போராடுதல், தமது சொந்த நிதியில் இருந்து நீதிமன்ற உட்கட்டமைப்பை விருத்தி செய்ய
உதவுதல், நீதிமன்றங்களின் தரத்தை மேம்படுத்த உதவுதல் போன்ற பணிகளில் தமது வாழ்நாளை  முழுமையாக அர்ப்பணித்தார்.வட இலங்கையின் மல்லாகம் நீதிமன்றக் கட்டமைப்பு, மிகப் பிரமாண்டமாகக் காட்சியளிக்கின்றதென்றால், இதற்குப்பின்னால், திரை மறைவில் செயற்பட்டவர் இவராவார்.

இவரது இழப்பால் தவிக்கும்  இவரது குடும்ப உறவுகள், கட்சிக்கார்கள், சட்டத்தரணிகள் ஆகியோருக்கு www.ceylon24.com
தமது ஆழ்ந்த அனுதாபங்களைக் காணிக்கையாக்குகின்றது. 

தற்சமயம் இவரது உடலம், உடுவிலிலுள்ள தமது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் இன்று காலை 11 மணிக்கு இடம்பெறும்.

-இஸ்மாயில் உவைசுர்ரஹ்மான்