போதைப்பொருட்களுடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 3 சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணை




 


FAROOK SIHAN


போதைப்பொருட்களுடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 3  சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை   சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும்   கஞ்சா  தம்வம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் ஒன்றிற்கமைய கடந்த  திங்கட்கிழமை(12) இரவு முந்திரியடி வீதியில்  சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். சம்சுதீன் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பெருங்குற்றத்தடுப்பு  பொறுப்பதிகாரி ஏ.எஸ்.மேகவர்ண  உள்ளிட்ட குழுவினர் மேற்குறித்த   சந்தேக நபர்களை மாறுவேடத்தில் சென்று கைது செய்துள்ளனர்.

இதன் போது சந்தேக நபர்கள் வசம் இருந்து ஒரு தொகுதி கஞ்சா ஹெரோயின் என்பன  மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட மூவரும் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளர்.