(வி.ரி. சகாதேவராஜா)
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் நாட்டிய நிருத்தியாலய மாணவிகளின் "திக்கெட்டும் சதிரே" என்ற நாட்டிய சங்கமம் நேற்று முன்தினம்(1) திங்கட்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது .
சர்வதேச நடன தினத்தையொட்டி காரைதீவு விபுலானந்தா மணிமண்டபத்தில் பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில்
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.
சீர் பெறு அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகிய கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பாரதி ஃப்ளோரன்ஸ் கென்னடி கலந்து சிறப்பித்தார்.
மேலும் முதன்மை அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக அழகிய கற்கைகள் நிறுவனத்தின் நடனநாடகத்துறை தலைவர் கலாநிதி தாக்க்ஷாயினி பரமதேவன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஷர்மிளா ரஞ்சிதகுமார் கலந்து சிறப்பிக்க சிறப்பு அதிதிகளாக உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, ஆசிரிய ஆலோசகர் திருமதி ரீஷா பத்திரண, விபுலானந்த மணிமண்டப தலைவர் வெ.ஜெயநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலைய விபுலானந்த நாட்டிய நிருத்தியாலய பரத நாட்டிய வளவாளர் திருமதி சர்மினி சுதாகரன் மற்றும் உதவி வளவாளர் செல்வி ஜெயகோபன் தக்சாளினி ஆகியோர் நடனதின விழாவை நெறியாழ்கை செய்தனர்.
Post a Comment
Post a Comment