அலிகம்பை பிரதேச மக்களின் சுகாதார மேம்பாடு தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளரின் கள விஜயமும் கலந்துரையாடலும்




 


(நூருல் ஹுதா உமர்)


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் கோரிக்கைக்கமைவாக அலிகம்பை பிரதேசத்திற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜெ.ஜெ.முரளிதரன் தலைமையிலான குழுவினர் விஜயம் மேற்கொண்டு இப்பிரதேச மக்கள் எதிர் நோக்குகின்ற மருத்துவ தேவைகள் மற்றும் தொற்று நோய்கள் நாட்பட்ட நோய்கள்  தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் குறித்த பிரதேச சிவில் சமூகத்தினருடன் கருத்தாழமிக்க கலந்துரையாடல் ஒன்றில் பங்கு பற்றியிருந்தார்கள்.
 
குறித்த பிரதேச மக்களுக்கு வைத்திய சேவைகளை வழங்குவதற்கும் போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கும் தொற்று நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தொடர்பாக விழிப்புணர்வூட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இப் பிரதேச மக்களுக்கு அதிகமான நடமாடும் சேவைகள் மற்றும் சுகாதார சேவைகளை வழங்கும் ஆரம்ப வைத்தியசாலை என்பன ஆரம்பித்து வைக்கப்பட்டன. எனினும் தற்போது குறித்த பிரதேசத்தில் காணப்படுகின்ற தொற்று நோய்கள் மற்றும் தொற்ற நோய்கள் போன்ற நோய்களைய கட்டுப்படுத்துவதற்காகவும் மக்களின் போக்குவரத்து மற்றும் பொருளாதார நெருக்கடி என்பனவற்றை கருத்தில் கொண்டும் குறித்த பிரதேசத்திலேயே வைத்திய சேவைகளை வழங்குவதற்குமான நகர்வுகளை முன்னெடுப்பதற்காகவே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் விஜயம் மேற்கொண்டு குறித்து நடவடிக்கைகளை பரிசீலித்து வருகின்றனர்.

குறித்த கள விஜயம் மற்றும் கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார சேவைகள் சேவைகள்  பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ வாஜித் மற்றும் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சி. மாஹிர் உள்ளிட்ட பலரும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது