( வி.ரி.சகாதேவராஜா)
உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் கிழக்கு மாகாணத்திற்கான பூப்பந்தாட்ட பயிற்சிப்பட்டறை முதல்முறையாக அம்பாறை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இப் பயிற்சி முகாமின் பயிற்றுவிப்பாளராக உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் இலங்கைக்கான இணைப்பாளரும் பயிற்றுவிப்பாளருமான அன்ரனி ஜெயகாந்தன் கலந்துகொண்டார் .
இதில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்து சிறப்பித்தனர்.
இப் பயிற்சி முகாமானது இப் பிரதேசத்திலுள்ள வீர வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் செயற்பாடாகவும் திறமைகளை ஊக்கப்படுத்தும் ஒரு பயிற்சி முகாமாகவும் அமைந்திருந்தது.
இப் பயிற்சி முகாமின் போது கனடா நாட்டின் எல்சன் பூப்பந்தாட்டக் கழகமானது
வீரர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி உதவியிருந்தார்கள்.இந்த கழகமானது வடக்கு கிழக்கு வீரர்களுக்கு வருடந்தோறும் அவ்வாறான உதவிகளை வழங்கி வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பயிற்சி முகாமினை எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக ஏற்படுத்தி எமது பிரதேசத்திலுள்ள வீரர்களை தேசியரீதியில் வெற்றி பெறச் செய்வதற்கு உறுதுணையாக உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை கைகோர்த்து நிற்க வேண்டுமென விளையாட்டு அதிகாரி பத்மநாதன் வசந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment
Post a Comment