(நூருல் ஹுதா உமர்)
டெங்கு கட்டுப்பாட்டு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபையினால் டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் செவ்வாய்க்கிழமை (16)
வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய கொள்கலங்களான, டயர்கள், யோக்கட் கப், சுரட்டைகள், மட்டைகள், பிளாஸ்டிக் கொள்கலங்கள் சேகரிக்கப்பட்டதுடன் நீர்தேங்கியுள்ள இடங்கள், வடிகான்களும் துப்புரவு செய்யப்பட்டது.
இதில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.றாசீக், சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீட், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்தபா, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபையின் மேற்பார்வை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை பிரதேச சபையினால் சம்மாந்துறை மத்திய வலயம், சம்மாந்துறை கிழக்கு வலயம், சம்மாந்துறை மேற்கு வலயம் ஆகிய மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment