வெண்பனி மலர்கள்





 (நூருள் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர்)


கல்முனை கிரீன் பீல்ட் கமு/கமு/ ரோயல் பாடசாலையில் தரம் 1 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா  புதன்கிழமை (03)  பாடசாலை வளாகத்தில்  நடைபெற்றது.

"செயற்பாட்டு அடிப்படையிலான வாய் மொழி மூல ஆங்கிலம்" எனும் தொனிப்பொருளில் பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.எம். றஸ்மி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் கெளரவ அதிதிகளாக கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியுமான ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ், அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.ஏ. அஸீஸ் ஆகியோரும், இலங்கை வங்கி ஓய்வுபெற்ற முகாமையாளர் ஏ.எச்.ஏ.சமட் உட்பட பாடசாலை நிறைவேற்று அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள், பெற்றோர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், அதிதிகளால் மாணவர்களுக்கு அகரம் எழுதப்பழக்கிய நிகழ்வும் இடம்பெற்ற அதேவேளை, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவர்கள் மாலை அணிவித்து புதிதாக அனுமதி பெற்ற 37 தரம் 1 மாணவர்களையும் வரவேற்றனர்.