(
காரைதீவு சகா)
காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவு பவளவிழாவினை சிறப்பிக்கும் வகையில், கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றியம், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இரத்தவங்கி பிரிவுடன் இணைந்து நடாத்தும் *“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்”* இரத்ததான நிகழ்வானது இன்று (5) வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கிறது.
இன்று காலை 9 மணி முதல் இவ் இரத்த தான நிகழ்வு காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இடம்பெறும்.
வைத்தியசாலைகளில் தற்போது நிலவும் குருதித் தேவைப்பாட்டினை கருத்தில்கொண்டு குருதிக் கொடையாளர்கள் அனைவரும் வருகைதந்து உதவுமாறு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் லோ.சுலக்ஷன் கோரிக்கை விடுத்தார்.
Post a Comment
Post a Comment