பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டலும், துஆப் பிரார்த்தனையும்




 


நூருள் ஹுதா உமர்.


இம்மாதம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டலும், துஆப் பிரார்த்தனையும் அக்கரைப்பற்று பெரியபள்ளிவாசலில் எஸ். எம் சபீஸ் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

எல்லோருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். அதனால் எல்லோருக்கும்  சமமான வாய்புக்களைத்தர உலகம் காத்து கொண்டிருக்கின்றது. படிக்கின்ற காலத்தில் இருக்கின்ற பிரச்சினை சுபஹு (காலை) தொழுகையின் பின் படிக்கத் தொடங்குவோம் என எண்ணி இஸா (இரவு) தொழுகை வரை ஒத்திப்போட்டு காலம் அவ்வாறே சென்று விடும். கல்வி கற்பதற்கான நேரத்தை சரியாக ஒதுக்குவதற்கு குழந்தைகள்  தவறிவிடுகின்றார்கள் 
 
கடந்த பரீட்சையில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களைவிட அதிகமான புள்ளிகளை வருகின்ற பரீட்சைகளில் நீங்கள் பெற்றுவிட்டால் உங்களை நீங்களே வென்று விடுவீர்கள். அதற்காக நேரத்தினை ஒதுக்கி நன்னோக்கத்தோடு பரீட்சைக்கு தோற்றுங்கள் என இங்கு உரையாற்றிய எஸ்.எம். சபீஸ் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார் 

இந்நிகழ்வில் உலமாக்களின் வழிகாட்டல்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள், மற்றும் கோட்டக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்களின்  ஆலோசனைகள் மற்றும் மாணவர்களுக்கான துஆப் பிராத்தனையும்  இடம்பெற்றது