சீனாவில் தமிழ் மொழிக்கு சிறப்பு அந்தஸ்து !




 


( வி.ரி.சகாதேவராஜா)


சீனாவில் தமிழ் மொழிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது. அதற்கான தமிழ் பாடநூல் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது

இன்று உலக நாடுகள் பலவற்றிலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகளாவிய ரீதியில்  பல பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கான துறைகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில் சீனாவின் முதலாவது சீன மொழி மூல அடிப்படை தமிழ் பாட நூல் வெளிவந்துள்ளது.இந்த நூலை சீன பேராசிரியர் நிறைமதி எழுதி உள்ளார்.

இந்த செயற்பாடானது தமிழையும் தமிழ் மக்களையும் பெருமைபடுத்தும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் யுனான்மிஞ்சு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும் பேராசிரியருமான நிறைமதி சீனமொழி மூலமான அடிப்படை தமிழ்பாட நூலை எழுதி உள்ளார்.

இந்த செயற்பாட்டின் மூலம் சீனாவில் தமிழ்மொழியை மாணவர்கள் இலகுவாக கற்றுக்கொள்ள முடியும் .

சீனாவில் மாணவர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்று வருகின்றனர்..

இதற்கு முன்னர் பேராசிரியர் நிறைமதி எழுதிய "மலைகளை தாண்டி மதுரை பயணத்தில்", "சீன பெண்ணின் பண்பாட்டு தேடல்" என்ற நூலும் இந்தியாவில்பெரும் வரப்பரப்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 தமிழ் மொழி மீது கொண்ட பற்று காரணமாக தனது இயற் பெயரையும் தமிழ் பெயராக மாற்றி கொண்டமை அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

உலகின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்யும் பேராசிரியர் நிறைமதி தமிழ் மொழி மீதான பற்று காரணமாக அந்த பிரதேசங்களின் பெருமைகளை தமிழ் மொழியில் நூல்களாக வெளியிடுவதும் காணொளியாக வெளியிடுவதும் குறிப்பிடத்தக்கது.