சஹ்ரானின் சகாவுக்கு பிணை




 


சஹ்ரானின் சகாக்கு பிணை.......

 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரகாரியாக செயற்பாட்ட சஹ்ராண் ஹாசிமுடன் நேரடி தொடர்பு வைத்தியிருந்த  மற்றும் ஆயுத பயிற்சி மேற்கொண்ட குற்றத்திற்காக 2019/05/22ம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கையிது செய்யப்பட்ட கல்முனையைச் சேர்ந்த  சாவுல் ஹமீட் ஹமீஷ் மொஹொமட் மறுபெயர் சியாம் அபூஹஸன் என்பவரது வழக்கு இன்றைய தினம் (12/05/2023) கல்முனை மேல்நீதிமன்றில் கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ரொட்ஸ்க்கி அவர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது சாவுல் ஹமீட் ஹமீஷ் மொஹொமட் மறுபெயர் சியாம் அபூஹஸன் சார்பில் தெரிபட்ட சட்டத்தரணி K. M. முபின் என்பரால் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் அதாவது குறித்த எதிரியானவர் ஏறத்தாள 3 வருடங்களும் 11 மாதங்களும்  விளக்கமறியலில் இருந்து வருவதாகவும் எதிரி கையிது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது மனைவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார் என்றும் தற்போது குழந்தை கிடைத்து அக்குழந்தைக்கு மூன்று வருடங்களும் ஒன்பது மாதங்களும் ஆகும் . இருந்த போதிலும் இச்சந்தேக நபர் இது வரைக்கும் அக்குழந்தையை  பார்க்கவில்லை என்றும் அதனால் அவர் மனதளவிலும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் இவ்விடயத்தை கருத்தில் கொண்டு இச்சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு விண்ணப்பம் செய்தியிருந்தார் .  இவ்விடங்களை கருத்தில் கொண்ட கௌரவ சட்டமா அதிபர் சார்பில் தெரிபட்ட அரச சட்டவாதி எம். ஏ. எம். லாபீர் அவர்கள் குறித்த சந்தேக நபருக்கு கடுமையான நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்க தான் எதுவிதமான ஆட்சேபனை தெரிவிக்கவில்லை  என்று கூறியதற்கிணங்க கௌரவ மேல்நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ரொட்ஸ்க்கி அவர்கள் 25,000/-  ரூபாய் காசி பிணை, முப்பது லட்சம் பெறுமதியான மூன்று ஆட்பிணை, வெளிநாடு செல்ல தடை, சாட்சிகளை எச்சந்தர்ப்பங்களிலும் தொடர்பு கொள்ளக்கூடாது , மாதத்தின் கடைசி ஞயிற்றுக் கிழமைகளில் பயங்கரவாத தடுப்புப் பிரிவிக்கு வருகையை உறுதிப்படுத்தல் , ஒவ்வொரு விளக்க தவனைகளுக்கும் தவறாது சமூகமளிக்க வேண்டும் போன்ற கடுமையான நிபந்தனைகள் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தார்.