கலாநிதி அஷ்ஷேக் அல்ஹாபிழ்
MI.சித்தீக் (இன்ஆமி,அஸ்ஹரி) அவர்கள் அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்!
கலாநிதி அல்ஹாபிழ் எ.ஐ.எம்.சித்தீக் அவர்களின் சிந்தனைகளைப் பாராட்டுகின்றோம்.
கலாநிதி அவர்களின்வழிகாட்டல்கள்,
பிராந்தியத்தில் இஸ்லாமிய ஆய்வுக் கருத்தியல்களை மேலும் பரவலாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கலாநிதி அல்ஹாபிழ் எ.ஐ.எம்.சித்தீக் அவர்களது பல்லின சமூகங்களிடையிலான உறவை பேணல்" ஒர் இஸ்லாமிய நோக்கு எனும் நூல் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வுக் கலந்துரையாடல்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய சிந்தனைகளின் எழுச்சி மற்றும் முன்மாதிரியான பணிகள் நிபுணத்துவ முறையில் அமைய இவ்வாறான ஆளுமைகளின் பங்கேற்பு
அவசியமாக உள்ளது.
சமகாலத்தில் இவர் போன்ற
நிபுணத்துவ சிந்தனையாளர்களின் ஆத்மீக, சமய, சமூகப் பணிகள் மிக அவசியமாக உள்ளன.
ஆத்மீக,சமய,சமூகப் பணிகளை
சமூக மட்டத்தில் பரவலாக்க வேண்டும். இதற்கு தூரநோக்குமிக்க துறைசார் நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும்.
கலாநிதி அவர்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களுக்கும் எமது வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகள்!
Post a Comment
Post a Comment