(வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்தின் 10வது ஆண்டு நிறை
வை முன்னிட்டு காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகமும் ASCO அமைப்பும் இணைந்து நடாத்தும் கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி - 2023 காரைதீவு விபுலாநந்த மைதானத்தில் நேற்று முன்தினம் 06.05.2023 சனிக்கிழமை மாலை 4.30 கழகத்தலைவர் யா.டிலக்சிகன் தலமையில் இடம் பெற்றது.

காரைதீவு ௯டைப்பந்தாட்ட அணியினை எதிர்த்து மட்டக்களப்பு சிவானந்தா அணி மோதியது. இதில் காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகம் 45 புள்ளிகளையும், மட்டக்களப்பு சிவானந்தா அணியினர் 52 புள்ளிகளை பெற்று மட்டக்களப்பு சிவானந்தா அணியினர் வெற்றியை தனதாக்கிக்கொண்டனர்.
விளையாட்டு உத்தியோகத்தர் ப.வசந்த் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அஸ்கோ செயலாளர் சி.நந்தகுமார் உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநிதியாக .டேனியல் ஆகியோர் உரையாற்றினர்.
இதில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன் அணிகளுக்கு கேடயமும் வழங்கப்பட்டது.
விசேட அதிதிகளாக வை.கோபிகாந்த் (தலைவர், ப.நோ.கூ. சங்கம்,காரைதீவு), எஸ்.நேசராஜா தலைவர் விவேகாநந்தா விளையாட்டுக்கழகம்) எஸ். அருட்சிவம் (தலைவர்,றிமைன்டர் வினளயாட்டுக்கழகம்) மற்றும் இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநிதியாக .டேனியல் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment