வி.சுகிர்தகுமார் 0777113659
கிழக்கிலங்கை நிந்தவூர் மாட்
டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த 25ஆம் திகதி கர்மாரம்ப கிரியைகளோடு ஆரம்பமான அலங்கார உற்சவமானது 26ஆம் திகதி இடம்பெற்ற கும்பபூஜை அபிசேகம் மற்றும் அம்பிகை திருவீதி உலாவருதலோடும் தொடர்ந்து இடம்பெறும் திருவிழாக்களோடும் 30ஆம் திகதி இடம்பெற்ற பாற்குடபவனி இன்று இடம்பெற்ற அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் 07ஆம் நாள் திருவிழா 05ஆம் திகதி இடம்பெறும் தீர்த்தோற்சவம் திருவூஞ்சல் பூஜை 06ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடன் நிறைவுறும்.
இதற்கமைவாக இன்று அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழா அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வடிவேல் தலைமையில் இடம்பெற்றது.
திருவிழா பூஜைகளுக்கு முன்னராக அம்மன் பாடல் பஜனைகளும் இடம்பெற்றது. தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக நாகதம்பிரானுக்கு பால் வைக்கும் நிகழ்வு ஆலய தலைவர் ஜெயசிறிலினால் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து அம்மன் அபிசேக பூஜைகள் நடைபெற்றதுடன் அம்மன் அழகிய தேரில் அமர்ந்து ஆலய வீதி உலாவந்து அடியவர்களுக்கு அருள் வழங்கினார்.
பின்னராக அலங்கார பூஜைகள் நடைபெற்று அடியவர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
வழிபாட்டு கிரியைகள் யாவற்றையும் ஆலய தலைவர் ஜெயசிறில் பங்குபற்றுதலுடன் சிவாகம வித்தியா சிவாச்சார்ய திலகம் ஜோதிட வித்தியா தத்துவநிதி விபுலமணி சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ கோவர்த்தன சர்மா ஆகியோர் நடாத்தி வைத்தனர்.
வழிபாடுகளில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். பூஜைகளின் நிறைவாக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஆலய நிருவாக சபை உறுப்பினர் வி.ரி.சகாதேவராஜா அம்மனின் அற்புதங்கள் பற்றி உரையாற்றினார்.

Post a Comment
Post a Comment