( காரைதீவு சகா)
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் சித்திரை புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகை கலாச்சார விழா நேற்றுமுன்தினம் (3) புதன்கிழமை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நீண்ட காலத்துக்கு பிற்பாடு மூவின உத்தியோகத்தர்களும் கலந்து கொண்ட இந்த கலாச்சார விழாவில் பாரம்பரிய கலாச்சார பட்சணங்கள் பரப்பப்பட்டு பரிமாறப்பட்டன.
நிகழ்வு தொடர்பாக சிரேஷ்ட உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா
"எங்களிடையே பரஸ்பரம் நல்லுறவு ஐக்கியம் நிலவுவதற்கு இப்படியான நிகழ்வுகள் வழிகோலுகின்றன. எமது கலாச்சாரத்தை அடுத்த சந்ததிக்கு கடத்தவும் செய்கின்றன" என்று கூறினார் .
இலங்கை செஞ்சிலுவை சங்க உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இறுதியில் உத்தியோகத்தர்கள் அனைவரும் பட்சணங்களை பரிமாறி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.
Post a Comment
Post a Comment