கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கும் நிகழ்ச்சி





 நூருள் ஹுதா உமர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைந்த கரங்கள்  அமைப்பினால்  ஆயித்தியமலை மட்/ நரிப்புல்  தோட்டம் நடேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை பாடசாலையின் அதிபர் வேலுப்பிள்ளை மாதவன் தலைமையில் 
இடம்பெற்றது.

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களுக்கான நிதிப்பங்களிப்பினை  அவுஸ்ரேலியா சிட்னி நகரில் வசிக்கும் ராஜா சூப்பர் மார்க்கட் உரிமையாளர் வழங்கி இருந்தார்.மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் மிகவும் அதிகஷ்ட, தொழில் வாய்ப்பற்று வாழும் குடும்ப மாணவர்கள் கல்வி கற்கும்  ஆயித்தியமலை மட்/நரிப்புல் நடேஸ்வரா தமிழ் வித்தியாலய  பாடசாலையில் கல்வி கற்கும் (92) மாணவர்களுக்கு  இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் சப்பிரமணியம் கணேஸ் அவர்களும், விஷேட அதிதியாக ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் அதிபர் ரி. வித்தியானந்தன், மற்றும் இன் நிகழ்விற்கு அனுசரணை வழங்கிய அவுஸ்ரேலியா சிட்னி ராஜா சூப்பர் மார்க்கட் உரிமையாளரின் சகோதரர் ஆர். தயாளன் மற்றும் கே.மனோகரன், ஆர். மனோநிலா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும்  பாடசாலையின் ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இணைந்த கரங்கள் அமைப்பு கல்விற்கான சேவையினை ஆரம்பித்து ஒரு வருடமானாலும் இன்றைய இப் பாடசாலையுடன் சேர்த்து நூறு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை  என்பன வழங்கி அவர்களின் கல்விச் செயற்பாட்டினை  முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

மேலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன  இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான லோ.கஜரூபன், காந்தன், சி.துலக்சன், மா. ஜெயநாதன், சிருஸ்காந்.         சதீஸ்குமார், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.