.(சுகிர்தகுமார்)0777113659
சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினமான ஜூன் 31 ஆம் திகத்pயை முன்னிட்டு இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவானது பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது.
குறிப்பாக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவிகளுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கை முன்னெடுத்ததுடன் புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின கொடி விற்பனையையும் ஆரம்பித்து வைக்கப்பட்;டது.
'புகைத்தலிலிருந்து மீண்ட ஒரு கிராமம் மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் தேசம்' எனும் கருப்பொருளுக்கமைய சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரனின் ஒருங்கிணைப்பில்
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ந.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற விழிப்பூட்டல் கருத்தரங்கில் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் ஆயுர்வேத வைத்தியர் சித்தி சாமிலா வளவாளராக கலந்து கொண்டு போதைப்பொருள் பாவனையின் தாக்கம் அதனை கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விரிவான விளக்கமொன்றை வழங்கினார்.
இதேநேரம் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவிகளின் கேள்விகளுக்கும் பதில் வழங்கியதுடன் கிராமங்கள் தோறும் இத்தகவல்களை கொண்டு சென்று போதைப்பொருளுக்கு எதிராக போராட வேண்டியது அனைவரது கடமையும் பொறுப்பும் என்றார்.
இந்நிகழ்வுகளில் சமுர்த்தி சமூக அபிவிருத்திக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுதாய அடிப்படைய அமைப்புக்களின் தலைவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னராக சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வெளியிடப்பட்டிருக்கும் கொடி விற்பனையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் முதற்கொடி ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகருக்கு அணிவிக்கப்பட்டதுடன் ஏனைய பிரிவுத்தலைவர்களுக்கும் அணிவிக்கப்பட்டு கொடி விற்;பனை ஆரம்பிக்கப்பட்டது.

Post a Comment
Post a Comment