வி.சுகிர்தகுமார் 0777113659
அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் 30ஆவது ஆண்டு நிறைவின் முத்து விழா கொண்டாட்ட நிகழ்வுகள் இல்லத்தின் ஸ்தாபகர் இந்து இளைஞர் மன்ற தலைவர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் நேற்று இடம்பெற்றது.
நிகழ்வில் அருளாளர்களாக மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் சுவாமிகள் ஸ்ரீமத் நீலமாதவனானந்த ஜி மகராஜ் மற்றும் தம்பட்டை தபோவன துறவி ஸ்ரீமத் நித்தியானந்தா சுவாமிகள் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையராசன் கௌரவ அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தைகள் திணைக்கள் ஆணையாளர் ஆர்.றிஸ்வாணி விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று கிழக்கு விவசாய திணைக்கள பெரும்பாக உத்தியோகத்தர் சம்சுடீன் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜயதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரார்த்தனை மண்டப திறப்பு விழாவும் விசேட பூஜைகளும் அருளார்களால் நடாத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னராக அதிதிகள் வரவேற்க்கப்பட்டு தேசிய கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இல்ல மாணவர்களால் இல்லகீதம் இசைக்கப்பட்டதுடன் முத்து விழா கையேட்டினை இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை அதிதிகளுக்கு வழங்கி வைத்தார்.
மாணவர்களின் கலை நிகழ்வுகளை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் சேவை ஆற்றிவரும் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
இதேநேரம் விசேடமாக பிரதேச செயலாளர் வி.பபாகரன் இந்து இளைஞர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புக்களால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்தது.
இதன் பின்னராக திருக்கோவில் பிரதேச செயலாளர் கஜேந்திரன் வைத்தியர் சித்திரா தேவராஜன் வைத்தியர் குணாளினி சிவராஜ் கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தைகள் திணைக்கள் ஆணையாளர் ஆர்.றிஸ்வாணி ஆயுர்வேத வைத்தியர் மயில்வாகனம் முன்னாள் தவிசாளர் நடராஜா ஜங்ஸ்டார் விளையாட்டு கழக ஸ்தாபகர் சித்திரவேல் ஊடகவியலாளர் சுகிர்தகுமார் உள்ளிட்டவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதேநேரம் வை.எம்.எச்.ஏ பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சம்யினாக தெரிவு செய்யப்பட்ட காந்தி சலஞ்சர்ஸ் அணிக்கான வெற்றிக்கிண்ணமும் இரண்டாம் நிலை பெற்ற பாரதி ஸ்ரைக்கர்ஸ் அணிக்கான கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் பின்னராக ஆலயங்களுக்கான பெறுமதியாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

Post a Comment
Post a Comment