உலகளாவிய ராமகிருஷ்ணமடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவரும் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவருமான அதிவண ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜி மஹராஜ் 5 நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று 18 ஆம் தேதி வியாழக்கிழமை இலங்கை கொழும்புக்கு வருகை தந்தார்.
இன்று 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அவர் மட்டக்களப்பில் பல நிகழ்வுகளில் கலந்து கொள்வார் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தெரிவித்தார் .
நாளை மே 19 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் கல்லடி ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம திருக்கோவிலில் சிறப்பு சொற்பொழிவு இடம் பெறும்.
நாளை மறுநாள் சனிக்கிழமை 20 ஆம் தேதி காலை 9:30 மணி முதல் 12 30 மணி வரை சிறப்பு பொது நிகழ்வு மணிமண்டபத்தில் இடம்பெற இருக்கின்றது.
அங்கு வரவேற்புரையை பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் நிகழ்த்த, தலைமை உரையை இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷ்ராத்மானந்த ஜி மஹராஜ் நிகழ்த்துவார்.
இந்தியா காசி ராமகிருஷ்ணமட தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்த ஜீ மகராஜ் வாழ்த்துரை வழங்குவார்.
பின்னர் புத்தக மற்றும் இறுவெட்டு வெளியீடு இடம்பெறும் .
தொடர்ந்து உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவர் சுவாமி கௌதமானந்தா ஜீ மகராஜ் வாழ்த்துரை வழங்குவார்.
ராமகிருஷ்ண மிஷன் பணிகளில் இணைந்து செயல்படும் நிறுவனங்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம் பெறும்.
உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்த ஜீ மகராஜ் நன்றியுரை வழங்குவார்.
மே 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மந்திர தீட்சை இடம் பெற இருக்கிறது .
Post a Comment
Post a Comment