மானிய பசளை உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் வழங்கப்படும்!





 வி.சுகிர்தகுமார் 0777113659  


 ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் மானிய பசளை உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என பிரதேச விவசாய குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இன்று இடம்பெற்ற பிரதேச விவசாய குழுக்கூட்டத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தம்பிலுவில் பிரதி நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் பி.விகர்ணன் ஆலைடிவேம்பு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஹுசைன்டீன் அக்கரைப்பற்று கிழக்கு பெரும்பாக உத்தியோகத்தர் சம்சுடீன்  தம்பிலுவில் பிரதி நீர்ப்பாசன திணைக்கள தொழிநுட்ப உத்தியோகத்தர் சேந்தன் உள்ளிட்ட உள்ளிட்ட அதிகாரிகள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள், விவசாய பிரதிநிதகள் என பலரும் கலந்து கொண்டனர். பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதேச செயலாளர் வீணாக நீர் வெளியேற்றத்தை  தடுத்து விவசாய செய்கைக்கு தேவையான நீரை வழங்குவதுடன்  விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி அவர்களை பாதுகாப்பது அரச அதிகாரிகளின் கடமை என்பதுடன் அதனையே தாம் கடைப்பிடிப்பதாகவும் கூறினார்.
இதன் பின்னராக தம்பிலுவில் பிரதி நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் பி.விகர்ணன் உள்ளிட்டவர்கள்; உரையாற்றியதுடன்  விவசாயிகளின் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர். இதற்கமைவாக பின்வரும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
விவசாய செய்கையினை மேற்கொண்டுள்ள அனைவரும் இணைந்து யானைக்காவல் செய்கின்றவர்களுக்கான கொடுப்பனவை வழங்குவது எனவும் சாந்திபுரம் செல்லும் வீதியினை விவசாய அமைப்புக்களின் நிதிப்பங்களிப்புடன் சீரமைப்பது எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அத்தோடு நிலத்தடி நீரை பாதுகாக்கும் முகமாக தேவையற்ற விதத்திலான சின்னமுகத்துவாரம் அகழ்வை தொழிநுட்ப உத்தியோகத்தரின் தொழிநுட்ப கருத்திற்கு அமையவும் தடை செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
அத்தோடு அலிக்கம்பை கிராமத்தை சூழ்ந்துள்ள சிறு பற்றைகளை பொதுமக்கள் மற்றும் விவசாய அமைப்பு பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் அகற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.