(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய அதிபர் விவகாரம் தொடர்பில் இரு கோஷ்டிகள் ஏட்டிக்குப் போட்டியாக வலயக்கல்விப் பணிமனையின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தின.
நேற்று (29) திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரை இரு தரப்பினரும் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்மாந்துறை பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா மற்றும் அதிகாரிகளோடு பேசி ஆர்ப்பாட்ட ஸ்தலத்திற்கு வந்து ஆர்ப்பாட்டக்காரர்களோடு கலந்துரையாடப்பட்டது.
அதன் பின்பு இரண்டு கோஷ்டிகள் சார்பிலும் இரண்டு இரண்டு பேரை அழைத்து அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு விடயத்தை தெரிவித்து இதற்கான தீர்வைப் பெற்றுத் தருவதாக பணிப்பாளர் உமர் மௌலானா உறுதியளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் காரர்கள் கலைந்து சென்றார்கள்
Post a Comment
Post a Comment