பள்ளிவாசலின் மீள்கட்டமைப்பிற்காக ஐந்தாம் கட்ட பணம் கையளிப்பு




 


நூருல் ஹுதா உமர்


கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பு அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இளம் முஸ்லிம் பெண்கள்  (YWMA) பேரவையின் ஒருங்கிணைப்பில் கல்முனை கிறீன்பீல்ட் பள்ளிவாசலின் மீள்கட்டுமான பணிகளுக்காக ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பினால் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிதிகளுக்கு அமைவாக சில கட்டுமானப் பணிகள் நிறைவுற்றிருந்தன.

இதனைத் தொடர்ந்து கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான  ரஹ்மத் மன்சூர் அவர்கள் இதற்கான ஐந்தாம் கட்ட நிதி உதவியாக மேலும் ரூபா ஐந்து இலட்சம் பணம் அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் வைத்து பள்ளிவாசல் நிருவாகிகள், மஹல்லாவாசிகள் மற்றும் பலர் முன்னிலையில் வைத்து வழங்கி வைத்தார்.

இப்பள்ளிவாசலின் மீள்கட்டமைப்பிற்காக இதுவரை 6 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.