(வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு கூடைப் பந்தாட்ட கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கழகமும் அஸ்கோ(ASCO) அமைப்பும் இணைந்து நடாத்தும் கூடைப்பந்தாட்ட சுற்று போட்டி( Basketball tournament) நாளை(6) சனிக்கிழமை மாலை நடைபெற இருக்கின்றது .
கழகத் தலைவர் யோ. டிலக்சிகன் தலைமையில் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெறவிருக்கும் இப்போட்டிக்கு பிரதம அதிதியாக அஸ்கோ தலைவர் ஏ.விவேகானந்தராஜா கலந்துசிறப்பிக்கிறார். மேலும் பல முதன்மை சிறப்பு அதிதிகள் கலந்து சிறப்பிக்கிறார்கள்.
இறுதி சுற்றுப் போட்டியில் காரைதீவுகூடைப் பந்தாட்ட கழகமும் மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு கழகமும் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment