பாறுக் ஷிஹான்
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ் .லவகுமார் தெரிவித்தார் .
அம்பாறை மாவட்டம் கல்முனை தனியார் விடுதியில் மே தினத்தை முன்னிட்டு இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
பொது நிர்வாக சுற்றறிக்கை 10/2000 க்கு அமைவாக கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அமைச்சுக்களில் தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கியதான ஆலோசனைக் குழுக்களை தாவிப்பதன் மூலம் அவற்றின் காரியத்துரனையும் உற்பத்தி பெருக்கத்தையும் மேம்படுத்த செய்தல் வேண்டும்
கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அரச பேருந்துகளில் பயணிப்பதற்கான இலவச பஸ் பாஸ் நடைமுறையை அமுல்படுத்துமாறு மாகாண ஆளுநரை கோரல்
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமையாற்றும் பெண் அரச அலுவலர்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலத்தில் ஒரு நாள் விசேட விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் விவகார அமைச்சர் மற்றும் அரச நிர்வாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரை கோரல்
மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச சேவையாளர்களுக்கு என தனியான வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வீடமைப்பு அமைச்சை கோரல்
வெளிக்கள கடமையில் ஈடுபடும் அரச சேவையாளர்களுக்கு கடந்த ஆட்சியின் போது சலுகை விலை அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தை அம்பாறை மாவட்டத்தில் வழங்காது புறக்கணிக்கப்பட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கச் செய்வதற்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும்
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் மேற்பார்வை தரத்திலான விசேட தர பதவியணியை ஏற்படுத்துவதன் மூலம் அச் சேவையினை வினை திறன் மிக்கதாக அரச நிர்வாகத்திற்கு பயனுள்ள வகையில் மாற்றி அமைக்க கோரல்
ஆகியன உட்பட 14 அம்ச கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டதுடன் இலங்கை குடியரசின் ஜனாதிபதி பிரதமர் நிதி அமைச்சர், விட அமைப்பு அமைச்சர் மகளிர் விவகார அமைச்சர் ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
மேலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அரசாங்கம் பொது சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ. புஹாது, பொருளாளர் க.நடராஜா, பிரதிப் பொதுச் செயலாளர் ஏ.சிபான், தாய் சங்க மத்திய குழு உறுப்பினர்களான பி.கோகுலோஜன், எஸ் எல். பசீல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
Post a Comment
Post a Comment