காட்டுப்பாதை ஜூன் 12ஆம் திகதி திறக்கப்படும்!





 (வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி திறக்கப்படும்.

மீண்டும் அது ஜூன் 29 ஆம் திகதி மூடப்படும் 


இன்று (9) செவ்வாய்க்கிழமை பகல் கதிர்காமத்தில் மொனராகலை அரசாங்க அதிபர் மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர் முன்னிலையில்

 இடம் பெற்ற கூட்டத்தில் மேற்படி முடிவெடுக்கப்பட்டுள்ளது.



இதேவேளை உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் மற்றும் காட்டுப் பாதை திறப்பு தொடர்பிலான

முன்னோடிக்கூட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி   பகல் உகந்தை முருகன் ஆலய

வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. 


கதிர்காமம்  முருகனா லயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா

உற்சவம்  ஜுன் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை மாதம் 4  திகதி

தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.


அதேவேளை உகந்தை மலை  முருகனா லயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா

உற்சவம்  ஜுலை 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி

தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருக்கிறது.