சுபோகிருது என்றால் மங்கலம்!
அறிவியல் சார்ந்த தமிழர் புத்தாண்டு!
மற்றும் ஒரு புதிய வருடம் "சுபோகிருது" என்ற பெயரில் இன்று உதயமாகிறது. தமிழரின் 60 வருட சுற்றுவட்டத்தில் 37 வது வருடம் இது.."சுபோகிருது" என்றால் தமிழில் "மங்கலம்" என்று பொருள். அத்தகைய மங்கலமான புதிய வருடத்தை மங்கலமாக வரவேற்க வேண்டும்.
தமிழர்கள் ஏன் சித்திரை 1ஐ புத்தாண்டாக கொண்டாடினார்கள்? என்பதை அறிவீர்களா? அதற்கு அறிவியல் சார்ந்த விளக்கம் உள்ளதையும் அறிவீர்களா?
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1. எனவேதான்
தமிழர்கள் சித்திரை 1ஐ புத்தாண்டாக கொண்டாடினர் .
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்துக் கூறிய வானியல் சாஸ்திரம்
இந்துசமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள் எனலாம். இந்த நவீன விஞ்ஞானம் கண்டுபிடிப்பு ஆராய்ச்சிகள் எல்லாம் வரமுன்பே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழன் சந்திர சூரிய கிரகணங்களைக் கணித்து பஞ்சாங்கத்தில் பொறித்திருந்தான். அதுமட்டுமின்றி சந்திர சூரிய நகர்வுகள் நல்ல து கெட்டது நாள் கோள் பலன் அனைத்தும் அன்றே கணிக்கப்பட்டன. அத்தகைய அறிவுபூர்வமான சமுதாயமாக தமிழர் சமுதாயம் அன்றே விளங்கியிருந்தது.
பொதுவாக
சித்திரை 1 ஆடி 1ஐப்பசி 1 தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் என எண்ணியிருக்கின்றோம். அப்படியல்ல.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்புலமாக மிகப்பெரிய அறிவியலை வைத்திருந்தார்கள் என்பது தெரியுமா?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கும் தெரியும்..
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம் அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று..
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்.
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், பின்னர் தென்கிழக்கு நோக்கி நகரும்.
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு என்று போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்.
சரி.. இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்கலாம்.
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அதன் பின்னர் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கல். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்.
சித்திரை (vernal equinox) - புத்தாண்டு.
ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.
ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.
தை 1(winter solstice) - பொங்கல்.
அப்படிப்பட்ட ஒரு புத்தாண்டு பிறப்பை இன்று கொண்டாடுகின்றோம். அதுவும் 60 வருட சுழற்சியில் 37 வது வருடமான மங்கலம் என்னும் சுபோகிருது புதிய வருடத்தை வரவேற்கிறோம்.
இத்தகைய அறிவியல் சார்ந்த விடயத்தை நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்க்க வேண்டும்.
கடந்துவந்த கடினமான 2022 ஆம் ஆண்டிலே நடந்த நல்லதையும் தீயதையும் எண்ணிப்பார்த்து நமது குறைநிறைகளை நிவர்த்தி செய்து, மலர்ந்துள்ள புதிய ஆண்டை வரவேற்பதோடு, கடந்த ஆண்டு முழுவதும் நமக்கு உதவிய கடவுளுக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் கூறிக்கொண்டு, மலர்ந்துள்ள இந்த ஆண்டு புதிய எண்ணங்கள், புதிய முயற்சிகள் நல்ல சிந்தனைகள் என்பனவற்றால் ஒரு உயிரூட்டமுள்ள விசேட ஆண்டாக நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் அமைந்திடவும், இலங்கை முழுவதும் பிரகாசமான சந்தோசம் நிறைந்த சுபீட்ஷமான வாழ்வு மக்களுக்கு கிடைத்திடவும், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து... நம்மால் முடிந்தவரை எல்லோரையும் நேசித்து இன, மத, சாதி பேதமின்றி எல்லோருக்கும் உதவி செய்வோம் வாழும் காலம் முழுவதும் எல்லா மக்களையும் நேசிப்போம்...
தமிழ் வருடங்கள்!
சுபோகிருது என்றால் மங்கலம் என்று பொருள். அத்தகைய சிறப்பு பெயருடைய புது வருடத்தை வரவேற்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழன் அன்று வகுத்த 60 தமிழ் வருடங்களின் பெயர்களும் அவற்றின் சமஸ்கிருதம் மற்றும் தமிழ்ப்பெயர்களும் இங்கு தரப்பட்டுள்ளன.
01. பிரபவ - நற்றோன்றல்
Prabhava1987-1988
02. விபவ - உயர்தோன்றல்
Vibhava 1988–1989
03. சுக்ல - வெள்ளொளி
Sukla 1989–1990
04. பிரமோதூத - பேருவகை
Pramodoota 1990–1991
05. பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
Prachorpaththi 1991–1992
06. ஆங்கீரச - அயல்முனி
Aangirasa 1992–1993
07. ஸ்ரீமுக - திருமுகம்
Srimukha 1993–1994
08. பவ - தோற்றம்
Bhava 1994–1995
09. யுவ - இளமை
Yuva 1995–1996
10. தாது - மாழை
Dhaatu 1996–1997
11. ஈஸ்வர - ஈச்சுரம்
Eesvara 1997–1998
12. வெகுதானிய - கூலவளம்
Bahudhanya 1998–1999
13. பிரமாதி - முன்மை
Pramathi 1999–2000
14. விக்கிரம - நேர்நிரல்
Vikrama 2000–2001
15. விஷு - விளைபயன்
Vishu 2001–2002
16. சித்திரபானு - ஓவியக்கதிர்
Chitrabaanu 2002–2003
17. சுபானு - நற்கதிர்
Subhaanu 2003–2004
18. தாரண - தாங்கெழில்
Dhaarana 2004–2005
19. பார்த்திப - நிலவரையன்
Paarthiba 2005–2006
20. விய - விரிமாண்பு
Viya 2006–2007
21. சர்வசித்து - முற்றறிவு முழுவெற்றி
Sarvajith 2007–2008
22. சர்வதாரி - முழுநிறைவு
Sarvadhari 2008–2009
23. விரோதி - தீர்பகை
Virodhi 2009–2010
24. விக்ருதி - வளமாற்றம்
Vikruthi 2010–2011
25. கர - செய்நேர்த்தி
Kara 2011–2012
26. நந்தன - நற்குழவி
Nandhana 2012–2013
27. விஜய - உயர்வாகை
Vijaya 2013–2014
28. ஜய - வாகை
Jaya 2014–2015
29. மன்மத - காதன்மை
Manmatha 2015–2016
30. துன்முகி - வெம்முகம்
Dhunmuki 2016–2017
31. ஹேவிளம்பி - "பொற்றடை
Hevilambi 2017–2018
32. விளம்பி - அட்டி
Vilambi 2018–2019
33. விகாரி - எழில்மாறல்
Vikari 2019–2020
34. சார்வரி - வீறியெழல்
Sarvari 2020–2021*
35. பிலவ - கீழறை
Plava 2021–2022
36. சுபகிருது - நற்செய்கை
Subakrith 2022–2023
இவ்வருடம்
தமிழ் புத்தாண்டு
37. சோபகிருது - மங்கலம்
Sobakrith 2023–2024
38. குரோதி - பகைக்கேடு
Krodhi 2024–2025
39. விசுவாசுவ - உலகநிறைவு
Visuvaasuva 2025–2026
40. பரபாவ - அருட்டோற்றம்
Parabhaava 2026–2027
41. பிலவங்க - நச்சுப்புழை
Plavanga 2027–2028
42. கீலக - பிணைவிரகு
Keelaka 2028–2029
43. சௌமிய - அழகு
Saumya 2029–2030
44. சாதாரண - பொதுநிலை
Sadharana 2030–2031
45. விரோதகிருது - இகல்வீறு
Virodhikrithu 2031–2032
46. பரிதாபி கழிவிரக்கம்
Paridhaabi 2032–2033
47. பிரமாதீச - நற்றலைமை
Pramaadhisa 2033–2034
48. ஆனந்த - பெருமகிழ்ச்சி
Aanandha 2034–2035
49. ராட்சச - பெருமறம்
Rakshasa 2035–2036
50. நள - தாமரை
Nala 2036–2037
51. பிங்கள - பொன்மை
Pingala 2037–2038
52. காளயுக்தி - கருமைவீச்சு
Kalayukthi 2038–2039
53. சித்தார்த்தி - முன்னியமுடிதல்
Siddharthi 2039–2040
54. ரௌத்திரி - அழலி
Raudhri 2040–2041
55. துன்மதி - கொடுமதி
Dunmathi 2041–2042
56. துந்துபி - பேரிகை
Dhundubhi 2042–2043
57. ருத்ரோத்காரி - ஒடுங்கி
Rudhrodhgaari 2043–2044
58. ரக்தாட்சி - செம்மை
Raktakshi 2044–2045
59. குரோதன - எதிரேற்றம்
Krodhana 2045–2046
60. அட்சய - வளங்கலன்
Akshaya 2046–2047
இனி எந்த தங்குத்தடையும் இன்றி, 60 தமிழ் வருடங்களை சுயத்தை இழக்காமல் தமிழ்ப்பெயரோடு தமிழ் புத்தாண்டை வாழ்த்துவோம்...!
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் !
விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு
Post a Comment
Post a Comment