இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியா நேரப்படி அதிகாலை 3 மணியளவில் பூமிக்கு அடியில் 84 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்கு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment
Post a Comment