(சுகிர்தகுமார்)0777113659
ஸ்வாமியின் எல்லையற்ற அளப்பெரும் ப்ரேமையை ஆராதிப்போம் எனும் கருப்பொருளுக்கமைய இடம்பெற்ற ஊர்வலத்தில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு பிராந்தியத்தின் வழிகாட்டலில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு திருக்கோவில் தம்பிலுவில் சத்தியசாயி நிலையங்களின் அனுசரணையுடன் பிராந்தியத்திலுள்ள ஏனைய நிலைய மண்டலிகளின் பங்கேற்புடன் ஊர்வலம் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு சத்தியசாயி நிலையத்தில் இடம்பெற்ற பஜனையை தொடர்ந்து சுவாமியின் ஊர்வலம் அங்கிருந்து ஆரம்பமானது.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சுவாமியின் பஜனை பாடல்களை பாடியவாறு பிரதான வீதிகளினுடாக சென்று அக்கரைப்பற்று சத்தியசாயி நிலையத்தை அடைந்தனர். வீதிகளின் ஓரங்களில் பக்தர்கள் நிறைகும்பங்கள் வைத்து வழிபட்டனர்.
அங்கு இடம்பெற்ற பூஜைகளுடனும் மகாமங்கள ஆராத்தியுடனும் நாராயண சேவையுடனும் நிகழ்வு நிறைவுற்றது
Post a Comment
Post a Comment