நூருள் ஹுதா உமர்
சாய்ந்தமருதின் வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் விளையாட்டு நிகழ்வுகள் சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2023.04.23 ஆம் திகதி பௌசி விளையாட்டு மைதானத்தில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.
பாரம்பரிய புதுவருட விளையாட்டுக்கள் மற்றும் நடன நிகழ்வுகள் என களைகட்டியிருந்த நிகழ்வு, சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுடீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜயந்த ரத்னாயக்க கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்ததுடன்; இலங்கையில் தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் விளையாட்டு நிகழ்வுகள்; ஒரே காலப்பகுதியில் ஒரே குடையின் கீழ் இடம்பெறுவது இனங்களுக்கிடையே அன்னியோன்யத்தை ஏற்ப்படுத்தும் என்று தெரிவித்தார்.
கௌரவ அதிதிகள் வரிசையில் கல்முனை பொலிஸ் பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.வுட்டிக்க மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் ஆகியோர் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதியாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பொறியலாளர் ஏ.எல்.எம். பாறூக் கலந்து சிறப்பித்ததுடன் பிரதேச முக்கியஸ்தர்கள் விளையாட்டு வீரர்கள் சிறுவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment
Post a Comment