(Barathi)
மாணிக்கவாசகம் அண்ணன் காலமானாா் என்ற செய்தி அதிா்ச்சியளிக்கின்றது.
நீண்ட காலமாக காலனுடன் போராடிக்கொண்டிருந்தவா். அவரது மனத்துணிவுதான் அவரை இயக்கிக்கொண்டிருந்தது.
மருத்துவமனையில் இருக்கும் போதும் மடிக்கணினியில் வேலை செய்துகொண்டுதான் இருப்பாா்.
மூன்று தினங்களுக்கு முன்னா் - ஞாயிற்றுக்கிழமை அவரைப் பாா்ப்பதற்காக ராமும் நானும் சென்றிருந்தோம்.
அவரால் பேச முடியவில்லை. ஆனால், நாம் புறப்படும் போது “இருங்கோ இருங்கோ கதைப்பம்” என்றாா். அவரது உடல்நிலை மோசமாக இருப்பது தெரிந்தது. ஆனால், இவ்வளவு விரைவாக - இரண்டு நாள்களில் விடைபெறுவாா் என்பது எதிா்பாா்க்காதது.
தன்னுடைய வாழ்நாள் சாதனையாக பல நுால்களையும் எழுதியிருக்கின்றாா். இன்னும் ஒரு நுால் தயாரிப்புக்கள் நடைபெற்றுஞக்கொண்டிருக்கின்றது. அதனையும் முடித்து வெளியிட வேண்டும் என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. அனைத்துமே எமது சமூகத்தின் வரலாற்றுப் பதிவுகள்.
கொஞ்சம் சுகமாக இருந்தாலும் கணினியைக் கொண்டுவரச் சொல்லி வேலையைத் தொடங்கிவிடுவாா் என்று மனைவி சொன்னா். வேலை மீதிருந்த பேராா்வமும் மனத்துணிவும்தான் அவரை இயக்கிக்கொண்டிருந்தது.
அவரது பிரிவால் துயரத்திலிருக்கும் மனைவிக்கும் மகளுக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Post a Comment