சந்திவெளி ஆற்றில்,சந்தித்தார் மரணத்தை





 மீன்பிடித் தொழிலாளி நீரில் மூழ்கி பலி; சந்திவெளி பொலிஸ் பிரிவில் சம்பவம்

சித்திரை புத்தாண்டுக்காக பலகாரம் சுடும் வேலைகளுக்கு வீட்டாருடன் உதவியாகயிருந்துவிட்டு நேற்றிரவு மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவரே நீரில் மூழ்கி பலியானவர் ஆவார்.
சந்திவெளி, வட்டையார் வீதியை சேர்ந்த கந்தையா பவானந்தன் (43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையானவர் வழமையாக சந்திவெளி ஆற்றில் இரவு வேளைகளில் தோணியில் சென்று மீன்பிடித்து அதிகாலையில் கரைக்கு வருவதை வழக்கமாக கொண்டவர்.
நேற்றிரவு (12/04) மீன்பிடிக்க சென்ற இவர், மறுநாள்(13) காலை உரிய நேரத்துக்கு கரை திரும்பாததால், இவரது ஆண்மக்கள் இருவர் தோணியொன்றில் சென்று தேடியபோது, தோணியிலிருந்து வலை வீசும் போது தவறி விழுந்து வலைக்குள்சிக் குண்டதால் அதிலிருந்து மீளமுடியாமல் நீரில் மூழ்கி மரணமடைந்திருப்பதை கண்டுள்ளனர்.
பிள்ளைகள் இருவருமாக தந்தையின் சடலத்தை கரைக்கு கொண்டுவந்த பின் பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
சந்திவெளி பொலிஸ் நிலைய் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று சம்பவ இடத்துக்கு சென்ற மரணவிசாரணை அதிகாரி MSM. நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்ல பொலிசாரை பணித்தார்.
பிரேத பரிசோனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஏறாவூர் நஸீர்