புலமைப்பரிசில் வழங்கல்




 


நூருள் ஹுதா உமர்.


சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட் பட்ட சமுர்த்தி உதவி பெறும் மாணவர் களுக்கு கல்முனை எமினன்ஸ் கல்லூரி கணனி மற்றும் ஆங்கில கற்கை நெறிகளுக்கு இலவச புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு (10) திங்கட்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. 

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜுனைதாவின் வழிகாட்டலில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீனின் முயற்சியினால் இப்புலமைப்பரிசில் 30 மாணவ, மாணவிகளுக்கு கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்ராஸ் கெளரவ அதிதியாகவும் கல்முனை எமினன்ஸ் கல்லூரியின் பணிப்பாளர் எம்.ஏ.எம்.மாஹிர் விசேட அதிதியாகவும் தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.றிபாயா, ஆங்கில விரிவுரையாளர் எம்.பி.எம். நௌஷாட் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இதில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.ஆதம்பாவா, எம்.ஐ. அன்சார், ஏ.எம்.நளீம் உள்ளிட்ட பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப்புலமைப் பரிசில் திட்டத்திற்காக ஒரு மாணவருக்கு 50 ஆயிரம் ரூபா வீதம் 30 மாணவர்களுக்கும் 15 இலட்சம் ரூபாவினை கல்முனை எமினன்ஸ் கல்லூரி செலவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.