அம்பாரை மாவட்டத்தில் வாழும் இந்து மக்களும் சித்திரைப்புத்தாண்டு வழிபாட்டு நிகழ்வுகளில்





 Rep/Sukirthakumar.


அம்பாரை மாவட்டத்தில் வாழும் இந்து மக்களும் சித்திரைப்புத்தாண்டு வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

நாடு சுமூகமான நிலையினை நோக்கி நகர்ந்து வரும் இச்சந்தர்ப்பத்தில் மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் சித்திரை மகளை வரவேற்றனர்.
காலை 10 மணி;க்கு பின்னராக வீடுகளில் மருத்து நீர் தேய்க்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதேநேரம் 2 மணிக்கு பின்னராக அக்கரைப்பற்று ஸ்ரீP வீரம்மாகாளியம்மன் மற்றும் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் இடம்பெற்ற விசேட வழிபாட்டு நிகழ்வுகளில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் நாட்டிற்கு நல்லாசி வேண்டியும் துன்பங்கள் களைந்து மக்கள் இன்பமுடன் வாழ வேண்டி அம்மனை பிரார்த்திக்கும் விசேட பிரார்த்தனை நிகழ்வொன்று இடம்பெற்றது.
இதேநேரம் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் ஆலய தலைவர் வி.சுகிர்தகுமார் தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீP ப.கேதீஸ்வரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.
இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
பின்னராக ஆலய குரு உள்ளிட்ட பெரியோர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டதுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.